» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானில் கரோனாவால் 26 பேர் மரணம்: துணை அதிபருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி

வெள்ளி 28, பிப்ரவரி 2020 3:38:36 PM (IST)

ஈரான் நாட்டு துணை அதிபருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவைத் தொடர்ந்து தற்போது ஈரானிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டு சுகா​தா​ரத் துறை இணையமைச்​ச​ரும், கரோனா வைர​ஸுக்கு எதி​ரான திட்ட அமைப்பின் தலைவருமான இராஜ் ஹரீா்​சியைத் தாக்​கி​ய நிலையில், தற்போது துணை அதிபருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1979ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அமைச்சர் பதவியேற்ற முதல் முஸ்லிம் பெண் ஏப்டேகர் ஆவார். 

கடந்த சில நாட்களாக அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால், அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் வைரஸ் பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரானில் கரோனா வைரஸ் பாதித்த 26 பேர் மரணம் அடைந்தனர். தற்போது 245 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஈரானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஈரானுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள் தங்களது எல்லைகளை மூடிவிட்டன. விமானச் சேவைகளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory