» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா-அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

வெள்ளி 28, பிப்ரவரி 2020 11:57:23 AM (IST)

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இந்த பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர்டிரம்ப் முதல் முறையாக கடந்த 24-ந்தேதி அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். தனது 2 நாள் சுற்றுப் பயணத்தின் போது டிரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தனது பயணத்தின் இறுதி நாளான 25-ம் தேதி பிரதமர் மோடி-டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். 

இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆயிஷா ஃபாரூகி கூறுகையில், ஏற்கனவே நிலையற்ற தன்மையில் உள்ள பிராந்தியத்தை அமெரிக்கா-இந்தியா இடையேயான இந்த ஒப்பந்தம் மேலும் சீர்குலைத்துவிடும். பாகிஸ்தான் மட்டுமல்லாமல் இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளிடையேவும் மிகவும் ஆக்ரோஷமான தன்மையை பின்பற்றும் இந்தியா குறித்து உலக நாடுகளுக்கு நாங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory