» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை தாக்கினால் கடும் நடவடிக்கை: இம்ரான்கான் எச்சரிக்கை

வியாழன் 27, பிப்ரவரி 2020 12:30:13 PM (IST)

டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை தாக்கினால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என  இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘வெறுப்பு அடிப்படையிலான இனவாத சித்தாந்தங்கள் தலைதூக்கினால், அது ரத்தம் சிந்துதலையே ஏற்படுத்தும். இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டு இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர், ‘பாகிஸ்தானில் நமது முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரையோ அவர்களது வழிபாட்டு தலங்களையோ யாரும் தாக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். நமது சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ என்றும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory