» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை முடிவு எடுத்த சிறுவனுக்கு உலகம் முழுவதும் ஆதரவு குரல்

திங்கள் 24, பிப்ரவரி 2020 12:39:36 PM (IST)உருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை முடிவு எடுத்த சிறுவனை தற்கொலை எண்ணத்தில் இருந்து தேற்றும் வகையில் உலகம் முழுவதுதிலும் இருந்து ஆதரவு குரல் குவிந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த 9 வயது சிறுவன் குவார்டனுக்கு , நோய் பாதிப்பால் உடல் வளர்ச்சி குன்றியுள்ளது. பள்ளியில் தன்னை சக மாணவர்கள் உருவ கேலி செய்ததால் மனமுடைந்த சிறுவன் தாயிடம் தூக்கு கயிறு கேட்டுள்ளான். நெஞ்சை உலுக்கும் அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் டிவிட்டரில் குவார்டனுக்கு ஆதரவாக குரலெழுப்பினர்.  இந்நிலையில் உள்ளூர் ரக்பி போட்டியின் அணிவகுப்பில் குவார்டன் வீரர்களுடன் கைகோர்த்து நடத்து வந்தார். அப்போது ரசிகர்கள் குவார்டனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory