» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1,526 ஆக உயா்வு; 8,969 பேருக்கு வைரஸ் பாதிப்பு

சனி 15, பிப்ரவரி 2020 10:51:09 AM (IST)

சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கொரோனா வைரஸ்) பலியானவா்களின் எண்ணிக்கை 1,526-ஆக உயா்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 143 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,526-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 2,641 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 66,492-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளதாகவும், 11,053 பேர் வைரஸ் பதிப்பால் மோசமான நிலையில் உள்ளனர். 

8,969 பேருக்கு வைரஸ் பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களில் 8,096 பேர் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு திரும்புள்ளனர்.  இதனிடையே, வூஹானில் உள்ள மருத்துவமனைகளில் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு, வைரஸ் தடமறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சை,  செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory