» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எகிப்தில் ராணுவ சோதனைச் சாவடியில் தாக்குதல் முறியடிப்பு: 10 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

திங்கள் 10, பிப்ரவரி 2020 3:59:28 PM (IST)எகிப்தில் ராணுவ சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்த இருந்த 10 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவ படையினர் சுட்டுக்கொன்றனர்..

எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி கடந்த 2013ம் ஆண்டு ஜூலையில் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.  இதனயடுத்து  அந்நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில் நேற்று வாகனம் ஒன்றில் வந்த பயங்கரவாத குழுவினர் வடக்கு சினாய் நகரில் உள்ள சோதனை சாவடி  ஒன்றின் மீது தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டங்களை ராணுவ வீரர்கள்  பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு முறியடித்து உள்ளனர். அவர்காள் வந்த பயங்கரவாதிகளின் வாகனங்களையும் சுட்டு வீரர்கள் வீழ்த்தினர். இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 அதிகாரிகள் உள்பட 7 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் என இந்த தாக்குதல் குறித்து ராணுவத்தின் பேஸ்புக் பக்கத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory