» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் கொரோனா வைரசால் 37ஆயிரம் பேர் பாதிப்பு: ஒரே நாளில் 86 பேர் உயிரிழப்பு!!

ஞாயிறு 9, பிப்ரவரி 2020 8:32:15 AM (IST)கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகச் சீனாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 86 பேர் உயிரிழந்தனர். 37,198க்கும் மேலான நபர்களுக்கு இந்நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது.  நோயைக் கட்டுப்படுத்த சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720ஐ கடந்துள்ளது. புதிதாக 3,399 பேருக்கு நோய்ப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 37,198 பேருக்கு நோய்ப் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சீனாவின் உகான் நகரத்தில் உயிரிழந்துள்ளார். 1,280 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், 510 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 220 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஜப்பானில் 86 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும் உயிரிழந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory