» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் நிதியுதவி

சனி 8, பிப்ரவரி 2020 10:55:50 AM (IST)

கரோனா வைரஸை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் நன்கொடை அளிக்கிறது.

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை நேற்று 636ஆக அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 31,161 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் சீனா மற்றும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

அரசாங்கம் மட்டுமின்றி பலதரப்பு நிறுவனங்கள், தனியார் துறைகள் இந்த வைரஸை எதிர்த்து போராடவும், தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட குடிமக்களை பாதுகாக்கவும் உதவ வேண்டும். இதற்காக தேவைப்படும் தொழில்நுட்ப மருத்துவக் கருவிகளை அளிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பும் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுஸ்மான் கூறினார். வைரஸைக் கண்டறிதல், நோயாளிகளை தனிமடுத்தி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல், தடுப்பூசிகள் மருந்துகளை கண்டறிதல் உள்ளிட்டவைகளுக்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

ManikandanFeb 8, 2020 - 11:10:12 AM | Posted IP 162.1*****

ஒரு மில்லியன் டாலர் என்றாலே 7 கோடி ஆகும் . ப்ளீஸ் அந்த மதிப்பை மாற்றவும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory