» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் அறிவிப்பு

புதன் 4, டிசம்பர் 2019 12:13:49 PM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான தேர்வு தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்.

குறிப்பாக, ட்ரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, மெக்ஸிகோ சுவர் விவகாரம், வரிவிதிப்புக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து செனட் சபையில் வலுவாக அவர் குரல் கொடுத்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்ப்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்தது.

இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்தான் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க முடியும். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " எனது ஆதரவாளர்களே ஆழ்ந்த வருத்ததுடன் எனது பிரச்சாரத்தை நிறுத்தி வைக்கிறேன். ஆனால் நான் உங்களிடம் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் மக்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவேன்” என்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன், சென்னையைச் சேர்ந்தவர். கமலாவின் தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். கமலா ஹாரிஸ் முதல் ஆப்பிரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் ஆவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory