» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் தொடரும், புதிய தலைவன் இருக்குமிடம் தெரியும் : டிரம்ப்

புதன் 13, நவம்பர் 2019 5:37:32 PM (IST)

ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் தொடரும், அவர்களது புதிய தலைவன் மீது இருக்குமிடத்தை கண்காணித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48) கடந்த 26ம் தேதி கொல்லப்பட்டார். சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பதுங்கி இருப்பதை துப்பறிந்து அமெரிக்க சிறப்பு படை அந்த இடத்தை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி பலியானார்.

இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது. மேலும் பாக்தாதி கொல்லப்பட்டதற்கு தகுந்த பதிலடி அளிப்பதாகவும் ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்கும் இடத்தை கண்காணித்து வருவதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என நாங்கள் அறிவோம் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் பொருளாதார சங்கத்தில் பேசிய டிரம்ப், ‘ஐ.எஸ் அமைப்பின் தலைவன் பாக்தாதி கொல்லப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவரையும் கொன்றுவிட்டோம். மூன்றாவதாக ஒரு தலைவர் உருவாகி உள்ளார். அவரையும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது. அவருக்கு மிகப்பெரிய சிக்கல்கள் காத்திருக்கின்றன, ஏனென்றால் அவர் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும்’ என கூறினார். ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இன்னும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகமாக பரவியுள்ளனர், அவர்கள் மீது தாக்குதல் தொடரும் என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory