» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மக்கள் போராட்டம் எதிரொலி: 13¾ ஆண்டுகள் பதவி வகித்த பொலிவியா அதிபர் மார்லஸ் ராஜினாமா

செவ்வாய் 12, நவம்பர் 2019 9:02:10 AM (IST)முதல் முறையாக 2006ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த மாரல்ஸ் 13 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களுக்கு அதிபர் பதவியில் இருந்துள்ளார்.

தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே தான் வெற்றி பெற்றதாக அறவித்துக்கொண்டார் மாரல்ஸ். வாக்கு எண்ணும் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பொலிவியா நாட்டின் அதிபர் எவோ மாரல்ஸ் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் 20ஆம் தேதி தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

47.07 சதவீதம் வாக்குகள் பெற்ற மாரல்ஸ் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் நடத்தும் அமைப்பு அறிவித்தது. ஆனால் அக்டோபர் 25ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே தான் வெற்றி பெற்றதாக அறவித்துக்கொண்டார் மாரல்ஸ். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அதிபர் கார்லஸ் மெசா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார். மாரல்ஸ் மீது தேர்தல் மோசடி புகார் கூறி தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் பொதுமக்களுடன் ராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்ஸ்க்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (Organization of American States) பொலியா நாட்டின் வாக்கு எண்ணும் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது என ஞாயிற்றுக்கிழமை கூறியது. இதனால் அதிபர் பதவியை எவோ மாரல்ஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். துணை அதிபர் அல்வாரோ கார்சியோவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். மாரல்ஸ் முதல் முறையாக 2006ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்தார். பொலிவியா நாட்டின் வரலாற்றில் அதிக காலத்துக்கு அதிபர் பதவியில் இருந்தவர் ஆவார். 13 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களுக்கு அதிபர் பதவியில் இருந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory