» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது

திங்கள் 11, நவம்பர் 2019 12:36:57 PM (IST)அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சிகாகோ சென்றார். அங்குள்ள ஓக் புரூக் டெரேசில் நடைபெற்ற 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார். விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ராஜா கிரு‌‌ஷ்ண மூர்த்தி, சேம்பர்க் மேயர் டாம் டெய்லி, ஓக் புரூக் மேயர் கோபால் ஆல் மலானி, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அரசு செயலாளர் ச.கிரு‌‌ஷ்ணன், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் உள்பட தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory