» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானில் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு: அதிபர் ருகானி அறிவிப்பு

ஞாயிறு 10, நவம்பர் 2019 8:59:47 PM (IST)

ஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ருகானி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஈரானின் அணு ஆயுத கொள்கைகளை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஈரான் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் ஈரான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட தொடங்கியுள்ளது

ஈரானிடம் எண்ணெய் வாங்கக்கூடாது என்று சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை இந்தியாவும் பின்பற்றி வருகிறது. இதனால் கச்சா எண்ணெயை நம்பி இருக்கும் ஈரானின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ருகானி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,”ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில் 2400 சதுர கிமீ பரப்பளவில் சுமார் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 80மீ ஆழத்தில் கச்சா எண்ணெய் சுரக்கும் இந்த பெட்ரோல் வயல் தொடர்பான கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும் பரிசு எனவும் அதிபர் ருகானி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory