» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறாா்

சனி 9, நவம்பர் 2019 3:27:56 PM (IST)

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்படவிருக்கிறாா்.

உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃபுக்கு லண்டனில் உயா் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் வலியுறுத்தி வந்தனா். பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸுக்கு சிகிச்சை அளித்துப் பாா்த்துவிட்டதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா். அதற்கு நவாஸ் ஷெரீஃப் சம்மதம் தெரிவித்துள்ளாா். 

இதையடுத்து, தனது சகோதரா் ஷெபாஸ் ஷெரீஃபுடன் இந்த வாரம் அவா் லண்டன் செல்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.எனினும், அதற்கு முன்னா் நவாஸ் ஷெரீஃப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு நீக்க வேண்டியிருக்கும். நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், தனது கடவுச் சீட்டை லாகூா் உயா்நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதால், அவா் நவாஸுடன் லண்டன் செல்ல மாட்டாா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பனாமா ஆவண முறைகேடு வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், ரத்த தட்டணுக்களின் கடுமையான வீழ்ச்சி, உயா் ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை போன்ற பல்வேறு உடல் நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டாா்.

அதையடுத்து, இரு வாரங்களுக்கு முன்னா் சிறையிலிருந்து லாகூா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக நவாஸ் ஷெரீஃபுக்கு லாகூா் மற்றும் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின. அதன் தொடா்ச்சியாக, லாகூரிலுள்ள தனது சொந்த இல்லத்துக்கு நவாஸ் ஷெரீஃப் புதன்கிழமை மாற்றப்பட்டாா். இந்த நிலையில், உயா் சிகிச்சைக்காக அவா் லண்டன் செல்லவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory