» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு
வியாழன் 7, நவம்பர் 2019 5:25:31 PM (IST)
இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர், அதே சமயம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்கள மக்கள் நாட்டின் மிகப்பெரிய தேர்தலில் இரண்டு வாரங்களுக்குள் வாக்களிக்க உள்ளனர்.
அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர், அதே சமயம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் வாக்களிக்க கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். மொத்தம் 1.6 கோடி இலங்கை மக்கள் நாட்டின் மிகப்பெரிய அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:50:31 AM (IST)

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 8:55:44 AM (IST)

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)
