» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா புனிதர் ஆனார்: போப் பிரான்சிஸ் அறிவிப்பு

ஞாயிறு 13, அக்டோபர் 2019 10:34:34 PM (IST)



வாடிகனில் நடந்த விழாவில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவை புனிதராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவித்தார்.

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை தற்போது பல கிளைகளை கொண்டு வளர்ந்துள்ளது. அயராத இறைப்பணி ஆற்றிய கன்னியாஸ்திரி மரியம் திரேசியா கடந்த 1926-ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு முக்திபேறு பெற்றவர் என்ற பட்டம் அப்போதைய போப் 2-ம் ஜான் பாலால் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மரியம் திரேசியாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில்  வாடிகனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இந்த விழாவில் மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் தலைமையில் சிறப்புக்குழு ஒன்று பங்கேற்றது.  இதற்காக இந்த குழுவினர் வாடிகன் சென்றனர். கத்தோலிக்க திருச்சபையில் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க அவரது மரணத்துக்குப் பிறகு 2 அதிசயங்களை நிகழ்த்தியிருக்க வேண்டும். அதன்படி இருவரின் நோய் தீர்த்து மரியம் திரேசியா அதிசயம் நிகழ்த்தினார். இதனை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த புனிதமான நிகழ்வு மூலம் கேரளாவில் உள்ள நூற்றாண்டுகள் மரபு கொண்ட சிரியோ-மலபார் தேவாலயத்தில் புனிதராக உயரும் 4-வது கன்னியாஸ்திரி மரியம் திரேசியா என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory