» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரான்சில் ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கு விழா: ராஜநாத் சிங் பெற்றுக்கொண்டார்
செவ்வாய் 8, அக்டோபர் 2019 5:14:26 PM (IST)

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வாங்கும் ரபேல் போர் விமானங்களை ஒப்படைக்கு விழா நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய ஒப்பந்தம் 2016ல் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி முதல் ரபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விழா பிரான்ஸ் நாட்டில் இன்று நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 87வது ஆண்டு தினம் மற்றும் இந்திய ஆயுத பூஜை விழா நாள் ஆகியவை ஒருங்கிணைந்த நாளாகிய செவ்வாய்க்கிழமையன்று ரஃபேல் போர் விமானத்தை அதன் உற்பத்தித் தொழிற்சாலையிலேயே இந்திய ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் பெற்றுக்கொண்டார் .
ரபேல் போர் விமானத்தைச் சுற்றி சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டிருந்தது. அந்த ரிப்பனை வெட்டி ரபேல் விமானத்தின் பொறுப்பை ராஜநாத் ஏற்றார். ரிப்பனை வெட்டியதும் அமைச்சரும் உயர் அதிகாரிகளும் விமானத்திற்குள் சென்று விமானத்தை சுற்றிப் பார்த்தார்கள். பின்னர் ரபேல் போர் விமானத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வானில் பறந்து வட்டம் அடித்தார். பின்னர் தரை இறங்கினார்.
பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவும் பிரான்சும் ஒப்பந்தம் செய்துகொண்டன. ரபேல் போர் விமானங்களை மொத்தவிலை 59000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா விலைக்கு வாங்க தீர்மானித்துள்ளேன் ரபேல் போர் விமானங்கள் 2020-ம் ஆண்டு மே மாதம் 4 விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேரும் எனவும் மீதமுள்ள விமானங்கள் 2022ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் வசம் ஒப்படைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் போர் விமானத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்தியா கூறியதால் தான் இந்த கால தாமதம் என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரபேல் போர் விமானத்தை உற்பத்தி செய்யும் டசால்ட் ஏவியேஷன் கம்பெனியையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சுற்றிப் பார்த்தார். பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள இந்த தொழிற்சாலைக்கு செல்வதற்கு முன்னால் பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் பார்லியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்தும் ரபேல் போர் விமானத்தை இந்தியா கோரியபடி திருத்தி அமைத்து தருவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் விமானப்படை உயரதிகாரிகள் கடற்படை உயரதிகாரிகள் பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். பின்னர் பிரான்ஸ் அதிபர் மாக்ரோனுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிபரின் எலிசி அரண்மனையில் பேச்சு நடந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட கூடாது : ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
வியாழன் 12, டிசம்பர் 2019 5:40:57 PM (IST)

பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்
புதன் 11, டிசம்பர் 2019 3:35:02 PM (IST)

அமித் ஷாவுக்கு எதிராக தடை: அமெரிக்க சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை
புதன் 11, டிசம்பர் 2019 10:29:30 AM (IST)

ஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டார்: தூதர் அறிவிப்பு!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 3:52:05 PM (IST)

ஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:48:58 PM (IST)

உலகின் இளம் பிரதமரானார் பின்லாந்து பெண் அமைச்சர் சன்னா மரின்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:25:41 PM (IST)
