» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது : இந்திய தூதர்

திங்கள் 16, செப்டம்பர் 2019 5:49:10 PM (IST)

மோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுசபையின் 74ஆவது கூட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 22ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோடி உரையாற்ற இருக்கிறார். மோடி நலமா? என்ற தலைப்பில் நடைபெறும் மோடி உரையாற்ற உள்ளார்.

சுமார் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிபர் ட்ரம்பும் மோடியுடன் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதி படுத்தியது.  நிகழாண்டு இரு தலைவர்களும் சந்தித்து கொள்ளும் 3-வது சந்திப்பு இதுவாகும். 

இந்த நிலையில், மோடி- டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு மிக்க வாயந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஸ்ரீங்கலா தெரிவித்துள்ளார்.  மோடி நலமா? நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சி முன்னெப்போதும் இல்லாதது, வரலாற்று சிறப்பு மிக்க வாய்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் சுமுக நிலையை மட்டும் இல்லாமல், மோடி, டிரம்ப் இடையேயான தனிப்பட்ட நல்ல புரிதலையும் நட்புணர்வையும் இந்த சந்திப்பு பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமிSep 17, 2019 - 07:54:10 PM | Posted IP 162.1*****

பாவாடைகளிடம் பிச்சை எடுக்கும் போது சூடு சொரணை எல்லாம் இருக்காது

பாலாSep 16, 2019 - 11:17:49 PM | Posted IP 173.2*****

ஆறு மணி பஸ் ஆறு மணிக்கு வந்துச்சாம்... ஏழு மணி பஸ் ஏழு மணிக்கு வந்துச்சாம்...

ஒருவன்Sep 16, 2019 - 05:58:48 PM | Posted IP 162.1*****

சங்கிகள் அடிக்கடி கிறிஸ்தவர்களை பாவாடை, வெளிநாட்டு கைக்கூலி என்று கேலி செய்யும் முட்டாள்கள் , ஆனால் மோடி யாரு ? அவரு அதே தானே, ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory