» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜம்மு-காஷ்மீர் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்கள்: ஐ.நா. தலைவர்களுக்கு மலாலா வேண்டுகோள்

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 9:50:40 PM (IST)

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு கல்வி உரிமை வேண்டும் என்பதற்காக போராடி அதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்ட மலாலா ஜம்மு-காஷ்மீரில் அமைதியாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல உதவும்படி ஐ.நா. சபையில் உள்ள தலைவர்களுக்கு சனிக்கிழமையன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த அரசியல் சட்டவிதி 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 42 நாட்களாக ஜம்மு-காஷ்மீரில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் மூடிக் கிடக்கின்றன. இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இணையதள சேவை சேவையை எந்த ஒரு மேடை மூலமாகவும் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. கம்பி தொலைபேசிகள் மட்டுமே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயங்குகின்றன.

மொபைல் தொலைபேசிகள் இரண்டு போலீஸ் மாவட்ட பகுதிகளில் மட்டுமே இயங்குகின்றது. மற்ற இடங்களில் மொபைல் தொலைபேசி இயங்குவதில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிக்கூடங்களை திறந்து திறக்க மாநில அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்து வருகிறார்கள். இந்நிலையில் டுவிட்டரில்  ஜம்மு-காஷ்மீர் நிலைமை பற்றி ட்வீட்டரில் செய்தி ஒன்றை மலாலா வெளியிட்டுள்ளார். 

ஐநா சபையிலும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அமைதி ஏற்பட உதவி செய்யுங்கள் .ஜம்மு காஷ்மீர் மக்கள் கூறுவது என்ன என்பதை கேளுங்கள். ஜம்மு காஷ்மீர் குழந்தைகள் அமைதியாக பள்ளிக்குச் சென்று திரும்ப உதவி செய்யுங்கள். ஜம்மு காஷ்மீர் இப்பொழுது உள்ள பெண் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டு அறிவதற்கு நான் விரும்புகிறேன் .

காஷ்மீரில் உள்ள பெண் குழந்தைகளைப் பற்றிய செய்திகளை அறிவதற்கு பலர் பல துறைகளில் மூலமாக முயற்சி செய்ய வேண்டி உள்ளது ஏனென்றால் ஜம்மு-காஷ்மீரில் தகவல் பரவுவது தடை செய்யப்பட்டுள்ளது. உலகத்திலிருந்து காஷ்மீர் மக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் குரலை உலகத்தில் உள்ள மக்கள் கேட்கச் செய்ய அவர்களால் முடியாத நிலையில் இருக்கிறார்கள். காஷ்மீர் மக்கள் பேசட்டும். இவ்வாறு மலாலா தன்னுடைய ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

பாஜக பதில்

மலாலா டுவிட்டரில் விடுத்துள்ள செய்திக்கு கர்நாடக மாநிலம் பாஜக பெண் எம்பி சோபா கரண்ட்லஜே டுவிட்டரில் பதில் கூறியுள்ளார்.

மலாலா அவர்களே, நீங்கள் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசுவதற்கு உண்மையில் தீவிரமாக முயற்சி மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தானில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலவந்தமாக சொந்த நாட்டிலேயே மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுடைய துயரங்கள் குறித்து நீங்கள் பேச வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் உண்மையில் இப்பொழுது வளர்ச்சிக்கான திட்டங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் எதுவும் அடக்குமுறைக்கு உட்படுத்த படவில்லை என ஷோபா தன்னுடைய டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory