» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சந்திரயான் 2 : விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா தீவிர முயற்சி!!

வியாழன் 12, செப்டம்பர் 2019 4:08:37 PM (IST)

சந்திரயான் 2 விக்ரம் லேண்டரை நோக்கி நாசா ரேடியோ அலைகளை அனுப்பியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கு பதில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 திட்டம் 95 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரை இறக்கி 14 நாட்கள் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய விக்ரம் லேண்டர் கருவியை மட்டும் திட்டமிட்டபடி தரை இறக்க முடியவில்லை. வேகம் அதிகரித்ததால் சற்று திசை மாறிவிட்ட லேண்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் தென்துருவ பகுதியில் விழுந்து கிடக்கிறது. அந்த லேண்டர் கருவிக்குள் இருக்கும் ரோவர் உள்பட சக்தி வாய்ந்த கருவிகள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தி கடந்த 7-ந்தேதி முதல் விஞ்ஞானிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்று 6-வது நாளாக இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒப்புதலுடன் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. நாசா விஞ்ஞானிகள் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தை மிக துல்லியமாக ஆய்வு செய்துள்ளனர்.

நாசாவிடம் விண்வெளியில் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அதிநவீன கட்டுப்பாட்டு மையம் உள்ளது. அந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் லேண்டரை நோக்கி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளன. லேண்டருக்கு நாசா விஞ்ஞானிகள் ‘ஹலோ’ என்று செய்தி அனுப்பியுள்ளனர். அதை பெற்றுக்கொண்டு லேண்டர் ஓரிரு நாட்களில் பதில் அளிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக நாளை அல்லது நாளை மறுநாள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நாசா நிறுவனம் கூறி உள்ளது. வருகிற 20-ந்தேதிக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தாவிட்டால் அதன் பிறகு அதை பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. எனவே அதற்கு முன்னதாக லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நாசா நிறுவனத்திற்கு அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா, ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரீட் நகரம் மற்றும் ஆஸ்திரேலியா கான்பேரா ஆகிய 3 இடங்களில் மிக நவீன கட்டுப்பாட்டு மையம் உள்ளது.

இந்த 3 மையங்களில் இருந்தும் லேண்டரை தொடர்பு கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா மிக தீவிரமாக முயற்சிகள் செய்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. நிலவின் தென்துருவ பகுதியில் சீனா ஆய்வு கூடம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு மிக வேகமாக பணியாற்றி வருகிறது. அதற்கு முன்னதாக அங்கு ஆய்வு கூடம் அமைத்து விட வேண்டும் என்று அமெரிக்கா காய்களை நகர்த்தி வருகிறது. எனவேதான் தென் துருவத்தில் விழுந்து கிடக்கும் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா விஞ்ஞானிகள் இந்தியாவையும் விட தீவிரமாக உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory