» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி உத்வேகம் அளிக்கிறது: நாஸா பாராட்டு

ஞாயிறு 8, செப்டம்பர் 2019 10:08:03 AM (IST)

நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சி உத்வேகம் அளித்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா  வாழ்த்து தெரிவித்துள்ளது. 

நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நேற்று அதிகாலையில் நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. எனினும், உத்தேசித்தபடி லேண்டர் தரையிறங்காதது மட்டுமின்றி, தரைக் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பையும் அது இழந்தது. இது இஸ்ரோவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது

இந்நிலையில், விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,  நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சிக்கு பாராட்டுகள். உங்களின் முயற்சி எங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. எதிர்காலத்தில் சூரிய மண்டல ஆராய்ச்சி திட்டங்களில் ஒன்றாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory