» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சோஃபா வேண்டாம்; சேர் போதுமே.. ரஷ்யாவில் சிறப்பு மரியாதையை ஏற்க மறுத்த மோடி!!

வெள்ளி 6, செப்டம்பர் 2019 11:47:20 AM (IST)ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

மேடையின் மீது வெள்ளை நிற சேர்கள் இருக்கும் போது, பிரதமர் நரேந்திர மோடிக்காக ஒரு அழகான சோஃபா கொண்டுவரப்பட்டது. ஆனால், தனக்கு மட்டும் அதுபோன்ற சோஃபா வேண்டாம் என்று கூறிவிட்ட மோடி, பிற அதிகாரிகள் அமர்ந்த அதே சேரில் தானும் அமர்வதாகக் கூறிவிட்டார். இந்த சம்பவம் விடியோவாக வெளியானது. அதனை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மோடியின் எளிமை மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் குணமும் ஏராளமானோரால் பாராட்டப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி, ரஷியாவில் தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். அந்நாட்டின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்குப் பொருளாதாரக் குழுவின் 5-ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முன்னதாக, கிழக்குப் பொருளாதாரக் குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ரஷியாவிலுள்ள தொழிலதிபர்களை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளின் தொழில்முனைவோர்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில், இணையதளம் ஒன்றை அவர் தொடக்கிவைத்தார். இந்த இணையதளம் இருநாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார். 

 


புதன்கிழமை நடைபெற்ற இந்தியா-ரஷியா இடையிலான 20-ஆவது வருடாந்திர மாநாட்டில், இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, அணுசக்தி, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் விளாடிவோஸ்டோக் நகருக்கும், சென்னைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  தனது இரண்டு நாள் ரஷிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரவு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory