» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிலிப்பைன்சில் குழந்தையை கைப்பைக்குள் மறைத்து கடத்த முயற்சி : பெண் கைது

வியாழன் 5, செப்டம்பர் 2019 7:48:33 PM (IST)

பிறந்து ஆறு நாட்களே ஆன குழந்தையை கைப்பைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற அமெரிக்கப் பெண் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டால்போட் (43) என்ற பெண்மணி பிலிப்பைன்ஸ் நாட்டின் நினாய் அகினோ சர்வதேச விமான நிலையத்தில், புதனன்று ஆறு நாள் குழந்தையை மறைத்து வைத்துக் கடத்த முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் அவரது சந்தேகத்துக் கிடமான நடவடிக்கைகளைக் கண்டு, குடியுரிமை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்ட போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்தப் பெண்ணை போலீஸ் கைது செய்த பின்னர், அவரையும் குழந்தையையும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய விசாரணை ஆணையம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தக் குழநதையின் பெற்றோரை தேடிக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory