» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தூய்மை இந்தியா திட்டத்திற்காக மோடிக்கு விருது: பில்கேட்ஸ் அறக்கட்டளை வழங்குகிறது
செவ்வாய் 3, செப்டம்பர் 2019 10:21:51 AM (IST)
தூய்மை இந்தியா திட்ட அமலாக்கத்திற்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸின் அறக்கட்டளை விருது வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டமானது வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதிக்குள் தனது இலக்கை நிறைவு செய்யும் வகையில் செயல்திட்டம் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தூய்மை இந்தியா திட்ட அமலாக்கத்திற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க மென்பொருள் வணிக தொழிலதிபர் பில்கேட்ஸின் அறக்கட்டளை விருது கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவருமான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலின்டா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கேட்ஸ் - மெலின்டா அறக்கட்டளை மூலம் உலகெங்கும் பல்வேறு பொதுச்சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் உயரிய விருது வழங்கப்படவுள்ள தகவலை பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜித்தேந்திரா சிங் திங்களன்று தெரிவித்துள்ளார்.ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அந்த சமயத்தில் மோடிக்கு விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிஸ் யுனிவர்சாக தென் ஆப்பிரிக்க அழகி தேர்வு
திங்கள் 9, டிசம்பர் 2019 4:32:55 PM (IST)

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை : அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா!!
திங்கள் 9, டிசம்பர் 2019 3:28:15 PM (IST)

காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:48:28 PM (IST)

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு 9,360 கோடி அவசர கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 12:30:50 PM (IST)

நித்யானந்தாவிற்கு அடைக்கலம் வழங்கவில்லை; தீவு எதையும் விற்கவில்லை: ஈகுவடார் மறுப்பு
வெள்ளி 6, டிசம்பர் 2019 5:51:51 PM (IST)

அதிபர் டிரம்ப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
வியாழன் 5, டிசம்பர் 2019 8:28:43 AM (IST)
