» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி

வியாழன் 22, ஆகஸ்ட் 2019 5:38:10 PM (IST)

இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நியூயார்க் டைம்ஸ்  நாளிதழுக்கு இம்ரான் கான் பேட்டியளித்துள்ளார்.

அரசியல் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீருக்கு  வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த இந்தியா, அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதுதொடர்பாக கடும் அதிருப்தியை தெரிவித்த பாகிஸ்தான் இந்த பிரச்சினையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. அதேசமயம் இந்தியாவுடனான பிரச்சினையை பாகிஸ்தான் பேச்சு வார்த்தையின் மூலமாக மட்டுமே சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தியுள்ள்ளன.

இந்நிலையில் இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும்  நியூயார்க் டைம்ஸ்  நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: இனி அவர்களிடம் பேசுவதில் பயன் எதுவும் இலலை. அவர்களிடம் ஏற்கனவே போதுமான அளவுக்கு பேசிவிட்டேன் என்பதைக் தான் குறிப்பிடுகிறேன். தற்போது நான் பழைய விஷயங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, துரதிர்ஷ்டவசமாக சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தைக்காக நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் இந்தியா ஏதோ அவர்களை திருப்திப்படுத்துவதற்காக செய்த ஒன்றாக எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு மேல் இதில்  நாங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory