» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் முடிவு

வியாழன் 22, ஆகஸ்ட் 2019 11:47:16 AM (IST)

காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். காஷ்மீர் விவகாரத்தை, அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதற்காக கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியிலான அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார். பாகிஸ்தான் பிரதமருக்கான தகவல் பிரிவு சிறப்பு ஆலோசகர் ஃபிர்தௌஸ் ஆஷிக் அவான் கூறுகையில், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் அடிப்படையில், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார். முன்னதாக, 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory