» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு : 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
சனி 17, ஆகஸ்ட் 2019 5:33:43 PM (IST)

இரண்டு நாள் பயணமாக பூடானுக்கு சென்ன பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பூடான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், நண்பகல் பூடான் சென்றடைந்தார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். ஒரு குழந்தை பூச்செண்டு கொடுத்து மோடியை வரவேற்றது. பின்னர் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பூடான் நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங், பூடான் நாட்டின் 4 வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சக் ஆகியோரை மோடி சந்தித்து பேச உள்ளார். மேலும் இந்தியா-பூடான் இடையே கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. நீர்மின் நிலையம் மற்றும் இஸ்ரோ சார்பில் கட்டப்பட்டுள்ள தரை கட்டுப்பாட்டு நிலையம் உள்ளிட்ட 5 திட்டங்களின் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய குடியரசு தினம்: இலங்கை பிரதமர் ராஜபட்ச வாழ்த்து
செவ்வாய் 26, ஜனவரி 2021 9:59:15 PM (IST)

பொருளாதார சரிவு: மிகப்பெரிய பூங்காவை ரூ.50 ஆயிரம் கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான்கான்!!
திங்கள் 25, ஜனவரி 2021 4:46:35 PM (IST)

இந்தியா அனுப்பிய 20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் சென்றடைந்தது: மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி
ஞாயிறு 24, ஜனவரி 2021 1:30:46 PM (IST)

ஒட்டுமொத்த உலகுக்கும் கரோனாவை வழங்கிய சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பியது
ஞாயிறு 24, ஜனவரி 2021 1:27:27 PM (IST)

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரசால் இறப்பு விகிதம் அதிகரிப்பு : போரிஸ் ஜான்சன்
சனி 23, ஜனவரி 2021 11:38:06 AM (IST)

டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக 15 ஆணைகள்: பதவியேற்ற முதல் நாளிலேயே பைடன் அதிரடி!
வியாழன் 21, ஜனவரி 2021 12:01:10 PM (IST)
