» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போர்ச் சூழலை பாகிஸ்தான் விரும்பவில்லை; இந்தியா உருவாக்குகிறது : இம்ரான் கான் குற்றச்சாட்டு
சனி 10, ஆகஸ்ட் 2019 10:10:47 AM (IST)
காஷ்மீர் விவகாரத்தில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக போர் ஏற்படுவது போன்ற சூழலை இந்தியா உருவாக்கி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திரும்பும் நோக்கில் எல்லையில் போர் ஏற்படுவது போன்ற சூழலை இந்தியா உருவாக்கி வருகிறது. முன்பு, புல்வாமா தாக்குதல் நடைபெற்றபோதும், காஷ்மீர் பிரச்னையில் இருந்து திசைத் திருப்ப, பாகிஸ்தான் வான் எல்லையில் அத்துமீறி பறந்து இந்திய விமானப் படையினர், போர் பதற்றத்தை உருவாக்கினார். அப்போதும், அவர்களது விமானத்தை சுட்டு வீழ்த்தி, பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இப்போது மீண்டும், இந்தியா போர் பதற்றத்தை உருவாக்க முயலுகிறது.இந்தியாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, இந்தியா வேண்டுமென்றே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவுடன் சுமுகமான உறவை மேம்படுத்தவே பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால், இந்தியா அதற்கு எதிராக நடந்து வருகிறது. பாகிஸ்தான் போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் காஷ்மீரில் இந்தியா நிகழ்ந்தும் கொடுமைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்லாமல் இருக்க முடியாது என்று இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக அழகியாக ஜமைக்கா மாணவி தேர்வு: இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவ் 3-வது இடம்
ஞாயிறு 15, டிசம்பர் 2019 2:33:32 PM (IST)

தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு
சனி 14, டிசம்பர் 2019 10:54:25 AM (IST)

பிரெக்ஸிட்டை நிறைவேற்ற இங்கிலாந்து மக்கள் சக்திவாய்ந்த உத்தரவு: போரிஸ் ஜான்சன் பெருமிதம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 12:00:24 PM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட கூடாது : ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
வியாழன் 12, டிசம்பர் 2019 5:40:57 PM (IST)

பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்
புதன் 11, டிசம்பர் 2019 3:35:02 PM (IST)

அமித் ஷாவுக்கு எதிராக தடை: அமெரிக்க சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை
புதன் 11, டிசம்பர் 2019 10:29:30 AM (IST)

sankarAug 10, 2019 - 11:11:19 AM | Posted IP 162.1*****