» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - அமெரிக்கா கருத்து

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2019 3:27:21 PM (IST)

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவு, முற்றிலும் அதன் உள்நாட்டு விவகாரம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க  வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஓர்ட்டகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கும் சிறப்பு அந்தஸ்து ரத்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என்ற இந்தியாவின் அறிவிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதேசமயம், இந்த நடவடிக்கைகள் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என இந்தியா குறிப்பிட்டு உள்ளது. இருப்பினும் தடுப்புக்காவல்கள் தொடர்பான தகவல் கவலை அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், பாகிஸ்தானுக்கு மறைமுகமாக அறிவுறுத்தும் வகையில், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory