» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 3 வயது வளர்ப்பு மகளை அடித்து கொன்ற இந்தியருக்கு ஆயுள் தண்டனை

வெள்ளி 28, ஜூன் 2019 8:53:43 AM (IST)

அமெரிக்காவில் 3 வயது வளர்ப்பு மகளை கொலை செய்த குற்றத்துக்காக இந்தியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரளாவைச் சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி சினி. இருவரும் அமெரிக்காவில்  பணியாற்றி வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு ேமத்யூ மனைவியுடன் இந்தியா வந்தபோது பீகாரில் உள்ள ஆசிரமத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து சென்றனர். அந்த குழந்தைக்கு ஷெரீன் என பெயரிட்டு வளர்த்து  வந்தனர்.  கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பால்குடிக்க மறுத்ததாக ஷெரீனை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்ததாகவும், அப்போது ஷெரீன் காணாமல் சென்றதாகவும் மேத்யூ போலீசில் புகார் கொடுத்தார். ஒரு வாரம் கடந்த  நிலையில் மேத்யூ வீட்டிற்கு சற்று தொலையில் உள்ள கால்வாயில் ஷெரீன் இறந்து கிடந்தாள். சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷெரீன் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. 5 இடங்களில் சிறுமியின் எலும்புகள் உடைந்து இருந்தன. உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து மேத்யூ மற்றும் சினி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் சினி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் மீதான வழக்கு கடந்த மார்ச்சில் தள்ளுபடி செய்யப்பட்டது.தொடர்ந்து டல்லாஸ் நீதிமன்றத்தில் சிறுமி கொலை  வழக்கு நடந்து வந்தது.  இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் கடந்த திங்களன்று முடிவடைந்தன. அப்போது மேத்யூ குழந்தையை அடித்து கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் 12 நீதிபதிகள்  அடங்கிய குழு தீர்ப்பு வழங்கியது. இதில் மேத்யுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னரே அவருக்கு பரோல் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory