» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு

வியாழன் 27, ஜூன் 2019 5:32:48 PM (IST)ஜி-20  உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றடைந்த மோடிக்கு, இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜி-20  அமைப்பின் ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு புறப்பட்டார்.  இன்று காலை ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை அடைந்தார். அவரை ஜப்பான் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் சுவிசோட்டல் நங்காய் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை இந்திய சமூகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். 

மாநாட்டில் ஜி-20 அமைப்பில் இடம்பெற்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  மேலும், மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். ஜி20 உச்சி மாநாட்டில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்தியாவில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல், செயற்கை நுண்ணறிவு, பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற பொதுவான சவால்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஜி20 மாநாட்டில் மோடி முன்வைக்க உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory