» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது: டிரம்ப் திட்டவட்டம்

செவ்வாய் 25, ஜூன் 2019 10:45:52 AM (IST)

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதிப்பதற்கான நிறைவேற்று ஆணையில் அமெரிக்க அதிபர்   டிரம்ப் கையெழுத்திட்டார்.

அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தநிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அதை திரும்ப பெற்றார். எனினும் ஈரான் மீது கோபத்தில் இருக்கும் அமெரிக்கா, அந்த நாட்டுக்கு ஏதாவது தண்டனை விதிக்க வழி தேடி வந்தது.

இந்தநிலையில் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா நேற்று விதித்தது. மேலும் ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையெழுத்து போட்டார். இது தொடர்பாக தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘ஈரான் உள்பட எந்த நாட்டுடனும் நாங்கள் மோதல் போக்கை விரும்பவில்லை. எனினும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்க நாங்கள் விடமாட்டோம் என்பதை மட்டும் என்னால் கூற முடியும்’ என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory