» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் மீது சைபர் தாக்குதல்: உளவு விமானத்தை தாக்கியதற்கு அமெரிக்கா பதிலடி

திங்கள் 24, ஜூன் 2019 8:51:48 AM (IST)



உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரானுடன் கடந்த 2015ல் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. இதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மற்ற நாடுகள் மீதும் தடை விதிப்பதாக அமெரிக்கா எச்சரித்தது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், தங்கள் நாட்டு வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ராணுவம் பதில் தாக்குதலுக்கு தயாரானதால் பதற்றம் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் இத்தாக்குதலை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.

ஆனால், ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ராணுவ சைபர் படைகள் சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரிகூறுகையில், ‘‘ஏவுகணை மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பு சேதமடைந்துள்ளது. இத்திட்டம் அதிபர் டிரம்ப்பிடம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு நடத்தப்பட்டதாகும். இதற்காக கடந்த சில வாரங்கள் திட்டமிடப்பட்டது’’ என்றார்.அமெரிக்காவின் சைபர் தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory