» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜூன் 21 ஆம் தேதி வரை வானில் ஸ்ட்ராபெர்ரி மூன் தெரியும் - நாசா தகவல்

வியாழன் 20, ஜூன் 2019 5:40:06 PM (IST)



ஜூன் 21 ஆம் தேதி வரை நிலவு சிவப்பாக இருக்கும், சில இடங்களில் பிங்க் நிறத்திலும் நிலவு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்த ஸ்ட்ராபெர்ரி நிலவை, சென்ற ஆண்டில் தெரிந்த பிளட் மூன் நிலவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நாசா கூறியுள்ளது. அது வேறு வகை நிலவு, இது வேறு வகை நிலவு என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும் என்றும், மற்ற சில இடங்களில் பிங்க் நிறத்தில் ஒளிரும் என்றும், இதற்குக் கரணம் அங்குள்ள வளிமண்டல விளைவுதான் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

பல இடங்களில் நிலவு உதயம் ஆகும் பொழுதும் மறையும் பொழுதும் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென்றும். சில இடங்களில் நடுவானில் நிலவு இருக்கும் பொழுது வெண்மையாய் தான் காணப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. கட்டுப்பாடற்ற வளிமண்டல விளைவுகளினாலும், பூமியின் அடிவானின் மிக அருகாமையில் நிலவு நெருங்கி வரும் காரணத்தினாலும் நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் ஒளிர்கிறது என்று காரணமாக சொல்லப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory