» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அடுத்த 8 ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும்: ஐநா கணிப்பு

செவ்வாய் 18, ஜூன் 2019 5:56:56 PM (IST)

அடுத்த 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என ஐ.நா., தெரிவித்துள்ளது.

ஐ.நா.சபை வெளியிட்டுள்ள உலக மக்கள் தொகை - 2019 என்ற அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. வரும் 2050ஆம் ஆண்டில் இந்த தொகை 970 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2019 மற்றும் 2050ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவில் மக்கள்தொகை 3 கோடி அளவில் குறையும் என கூறப்படுகிறது. ஆனால், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் மக்கள் தொகை உயர்வு வழக்கம்போலவே இருக்கும். 

இதனால் உலக மக்கள் தொகையில் பாதியளவு  இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தோப்பியா, தான்சானியா, இந்தோனேஷியா. எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் தற்போதுள்ள மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

தனி ஒருவன்Jun 19, 2019 - 11:41:01 AM | Posted IP 162.1*****

ஹி ஹி

நண்பன்Jun 19, 2019 - 09:53:36 AM | Posted IP 108.1*****

தேவை இல்லாத ஹாரன் அடிக்கவேண்டாம்

சாமிJun 19, 2019 - 09:52:54 AM | Posted IP 108.1*****

சொல்லவேண்டியவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் -

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory