» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி மாரடைப்பால் திடீர் மரணம்

செவ்வாய் 18, ஜூன் 2019 3:46:37 PM (IST)

எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (67). உளவு பார்த்ததாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் மீதான வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.  மோர்சி தனது விசாரணையின் போது ஐந்து நிமிடங்கள் பேசிய பின்னர் "மயங்கி தரையில் விழுந்தார் என்றும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்ததாக அரசு வழக்கறிஞர் சாதிக் கூறியுள்ளார். 

நீரிழிவு மற்றும் கல்லீரல் நோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் தெரிந்துள்ளதாக முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மோர்சி மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory