» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கொழும்பில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த தேவாலயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

ஞாயிறு 9, ஜூன் 2019 9:27:29 PM (IST)இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார்.
.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ம் தேதி பதவி ஏற்றது. 2-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி அவரது முதலாவது வெளிநாட்டு பயணத்தை அண்டை நாடான மாலத்தீவுக்கு மேற்கொண்டார். பிரதமர் மோடி சனிக்கிழமை மாலத்தீவு சென்றார். அங்கு அவருக்கு மாலத்தீவு அரசின் உயரிய விருதான `நிஷான் இஷுதீன் ஆட்சி விருதை அந்த நாட்டின் அதிபர் வழங்கினார்.

மாலத்தீவு பயணம் நிறைவடைந்து அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு சென்றார். அவரை கொழும்பு பண்டாரநாயகே  சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேரில் முறைப்படி வரவேற்றார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடந்த குண்டுவெடிப்பில் 11 இந்தியர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்பு, பிரதமர் மோடிதான்  அங்கு சென்றிருக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர். குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.

அதிபர் சிறீசேனாவின்  செயலகத்தில் மோடிக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அதிபர் சிறிசேனாவை மோடி சந்தித்து பேசினார்.   இந்தியப் பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்தார் இலங்கை அதிபர் சிறிசேனா. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு, பிரதமர் மோடியை சந்தித்து பேசியது.  இலங்கைத் தமிழர்களின் முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், சம்பந்தன் எம்.பி. தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். பின்னர்  பொதுமக்களுடன் மோடி உரையாடினார்.  இந்த நிகழ்ச்சிக்கு பின் பிற்பகலில் பிரதமர் மோடி இலங்கையில் இருந்து  இந்தியா திரும்பினார். இலங்கைக்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அந்நாட்டு போலீசார், போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவான அளவில் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory