» செய்திகள் » இந்தியா

ஆந்திராவில் முதல்முறையாக ஐதராபாத் வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்த திருநங்கைகள்!!

வெள்ளி 27, ஜனவரி 2012 5:29:11 PM (IST)

ஐதராபாத்தில் புதிய வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஆந்திர வாக்காளர்களில் முதல் முறையாக 20 திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மாநில தேர்தல் ஆணையர் பன்வர் லால், புதிய வாக்காளர் பட்டியலை ஐதராபாத்தில் நேற்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2011 ஜனவரி 5ம் தேதி வரையிலான வாக்காளர் பட்டியலில் இருந்து 39.58 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 27.61 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது உள்ள புதிய வாக்காளர் பட்டியலின்படி மாநிலத்தில் 5,57,63,428 வாக்காளர்கள் உள்ளனர். இது மாநில மக்கள் தொகையில் 65 சதவீதம். வாக்காளர்களில் 2,78,48,792 ஆண்களும், 2,79,14,616 பெண்களும், மேலும் 20 திருநங்கைகள் உள்ளனர். இம்முறை மூன்றாவது பாலினத்தை சேர்ந்த திருநங்கைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

வாக்காளர்கள் யார் வேண்டும் என்றாலும், ரூ.10 செலுத்தி இ.சேவா மையங்கள் மூலம் தங்களது அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பன்வர்லால் கூறினார்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory