» செய்திகள் » இந்தியா

தங்கப் புதையலுக்காக சிறுவனை நரபலி கொடுத்த தொழிலாளி: ஆந்திராவில் பயங்கரம்!!

வெள்ளி 27, ஜனவரி 2012 4:13:27 PM (IST)

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கனகாபூரைச் சேர்ந்தவர் நர்சய்யா டெய்லர். இவரது மகன் கணேஷ். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 
 
அவனது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ராதோட் ராஜு. ஓட்டல் தொழிலாளி இவரது நண்பர் பிரபாகர் கனகாபூர் பகுதியில் பழமையான கோட்டை ஒன்று உள்ளது. அதில் ஏராளமான தங்கப்புதையல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதினர்.
 
இந்நிலையில் ராதோட் ராஜு நிர்மல் நகரில் உள்ள சாமியார் ஒருவரிடம் சென்று அந்த கோட்டையில் உள்ள புதையலை எடுப்பது எப்படி? என்று யோசனை கேட்டார். அதற்கு அவர் சிறுவனை காளிக்கு நரபலி கொடுத்து பூஜை செய்தால் தங்கப் புதையலை எடுத்து விடலாம் என்று கூறினா£ர். 
 
இதையடுத்து ராதோட் ராஜு நண்பர் பிரபாகருடன் சேர்ந்து சிறுவன் கணேஷை ஏமாற்றி அந்த கோட்டைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவனை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று காளிக்கு நரபலி பூஜை செய்தனர். ரத்தத்தை எடுத்து கோட்டையின் பல்வேறு பகுதிகளில் தெளித்தனர். எலுமிச்சம் பழங்களை வெட்டி அதை ரத்தத்தில் நனைத்து புதையல் இருப்பதாக கூறப்படும் இடத்தை சுற்றி வைத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினர். 
 
இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற மகன் திடீர் என மாயமானதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவனை பல இடங்களில் தேடினர் கிடைக்கவில்லை. இதையடுத்து நிர்மல் நகர போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் கணேஷை, ராதோட் ராஜு அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
 
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று ராதோட் ராஜுவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகலின் பேரில் பிரபாகரும் பிடிபட்டார். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory