» செய்திகள் » இந்தியா

அரசு மரியாதையுடன் பரூக் மரைக்காயர் உடல் இன்று மாலை அடக்கம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

வெள்ளி 27, ஜனவரி 2012 11:04:32 AM (IST)

புதுவை மாநில முன்னாள் முதல்-அமைச்சரும் கேரள மாநில கவர்னருமான பரூக் மரைக்காயர் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

புதுவை மாநில அரசியலில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்த மரைக்காயர் அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்டார். உடல் நலிவு அதிகமானதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இரவு 9.20 மணியளவில் பரூக் மரைக்காயர் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இதனை தொடர்ந்து அவருது உடல் நேற்று இரவே புதுவைக்கு கொண்டு வரப்பட்டது.

புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு இன்று காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பரூக் மரைக்காயர் உடல் இன்று மாலை 4 மணிக்கு உப்பளம் முஸ்லீம் அடக்கஸ்தலத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவையொட்டி புதுவை மாநிலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மறைந்த பரூக் மரைக்காயர் 1937-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்தவர். பள்ளி பருவத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர். படிக்கும் காலத்திலேயே அரசியலில் ஈடுபட்டவர்.

புதுவை மாநில முதல்-அமைச்சராக 3 முறை பதவி வகித்தவர். இளம் வயதிலேயே சபாநாயகர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் மத்திய சுற்றுலா மற்றும் விமானத்துறை அமைச்சராக இருந்தவர். 3 முறை புதுவை பாராளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.   சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றியவர்.

கடந்த 2010ம் ஆண்டு ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் கேரள கவர்னராக பணியாற்றி வந்தார். பரூக் மரைக்காயர் தனது வாழ்நாளில் பெரும் பகுதி அரசின் உயர்பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த பரூக் மரைக்காயருக்கு ஷாஜகான் என்ற மகனும், மல்லிகா, யாஸ்மின் என்ற மகள்களும் உள்ளனர். இதில் ஷாஜகான் புதுவை மாநில முன்னாள் அமைச்சர் ஆவார். மூன்று முறை புதுவை முதல்வராக இருந்துள்ள இவர், புதுவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கும் 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2010-ல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் 2011 ஆகஸ்ட் 25-ம் தேதி கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


மக்கள் கருத்து

vekamவெள்ளி 27, ஜனவரி 2012 - 06:23:47 PM | Posted IP 117.2*****

கவுரவமான கண்ணியமான அரசியல்வாதி ! நாராயணசாமி போன்றவர்கள் இவரிடம் தர்மம் எடுக்கணும்

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory