» செய்திகள் » இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு கட்டண தரிசன நேரம் மாற்றம்

வியாழன் 26, ஜனவரி 2012 5:53:13 PM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம், ரூ.50, மற்றும் ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம் என வசதிகள் உள்ளன. ரூ.50 கட்டண தரிசனத்தில் செல் வோரும் ரூ.300 கட்டண தரிசனத்தில் செல்வோரும் ஒரே நேரத்தில் தான் சாமி யை தரிசிக்கிறார்கள்.
 
எனவே ரூ.300 கட்டணம் செலுத்திய பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேவஸ் தானம் ரூ.300 சிறப்பு கட்டண தரிசன நேரத்தை மாற்றி அமைத்தனர்.
 
அதன் படி சனி,ஞாயிறு காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை, திங்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, இரவு 9 முதல் 11 மணி வரை, செவ்வாய் காலை 8.30 முதல் மதியம் 2 மணி வரை தரிசனம் செய்யலாம். புதன்,மற்றும் வியாழன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, இரவு 9 முதல் 11 மணி வரை, வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 6 மணி வரை, இரவு 9 முதல் 11 மணி வரை பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம்.
 
இந்த புதிய திட்டத்தால் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory