» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க எஸ்மா சட்டம் அமல்: பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:25:37 PM (IST)
அரபு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய 'அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம்' (Essential Services Maintenance Act) மற்றும் 1951-ஆம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
எரிபொருட்களைப் பதுக்குபவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் கைது நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்தை இனி மத்திய அரசே நேரடியாகக் கண்காணிக்கும். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், எரிபொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடையால் உள்நாட்டில் செயற்கையான தட்டுப்பாடு உருவாவதைத் தடுக்கவும், சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ; சிசுவுடன் இளம்பெண் பலியான கொடூரம் - போலீஸ் விசாரணை!
ஞாயிறு 17, மே 2026 11:49:21 AM (IST)

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)

பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பாஜக பிரமுகர் மீது ம.பி முதல்வர் நடவடிக்கை
சனி 16, மே 2026 12:44:51 PM (IST)

போர் பதற்றங்களுக்கு இடையிலும் உயர்ந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி: ரிசர்வ் வங்கி அறிக்கை
சனி 16, மே 2026 12:21:02 PM (IST)

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்!
சனி 16, மே 2026 8:32:00 AM (IST)

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)


