» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராகுல் காந்தி அளித்த தரவுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது: ப.சிதம்பரம்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 11:20:34 AM (IST)
ராகுல் காந்தி அளித்த தரவுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது, பதில் அளிக்க நிறைய இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பா.ஜனதா தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் பெங்களூரு மத்திய தொகுதியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: கர்நாடகாவில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்யப்பட்டு திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஒரு வலிமையான ஆதாரத்தை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.
ராகுல் காந்தி 6 மாத கால கடினமான முயற்சியின் மூலம் சேகரித்த தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது. மகாதேவபுரா தொகுதியில் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பது குறித்த தரவுகளை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நிறைய இருக்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
srinivasanAug 8, 2025 - 04:33:22 PM | Posted IP 104.2*****
HE IS ANTI INDIAN. CHETTI SUNNI ...............
மேலும் தொடரும் செய்திகள்

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)



கர்நாடகாAug 9, 2025 - 08:38:51 AM | Posted IP 104.2*****