» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் இந்தியா செயல்பட்டு வருகிறது : குடியரசு தலைவர்

செவ்வாய் 31, ஜனவரி 2023 11:48:12 AM (IST)

ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை கூறியதாவது: திருவள்ளுவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 2047-ம் ஆண்டிற்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும், ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழவேண்டும். 2047-ம் ஆண்டில் அடையவிருக்கும் லட்சியத்திற்கு ஏற்ற அடித்தளத்தை அமைக்க வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு நடைபோட்டு வருகிறது.

9 ஆண்டுகளில் உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி நகர தொடங்கியுள்ளோம் என குடியரசு தலைவர் கூறினார். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம். நாட்டின் இளைஞர்களும் பெண்களும் முன்னிலையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திரவுபதி முர்மு கூறினார்.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சனையை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சனைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது. ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை உள்ளதாக, நடுத்தர வர்க்கம் செழிப்பான, இளைஞர்கள் முன்னிலையில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும். நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நினைவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என ஜனாதிபதி கூறினார்.

சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது. கர்சீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறுகின்றனர்.துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைக்கு பதிலடி தரப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. முறைகேடு என்பது நாட்டிற்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணித்து வருவதாக திரவுபதி முர்மு கூறினார்.

கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது. பழங்குடியினருக்காக முன்னெப்போதும் இல்லாதா முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாத பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டத்தின் வெற்றியை நாம் அனுபவித்து வருகிறோம். பணிகளில் பெண்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்க கூடாது என்பதை உறுதி மத்திய அரசு உறுதி செய்தது. நமது மகள், சகோதரிகள் உலக அளவில் பரிசு பெறுவது பெருமைக்குரியது. நமது பாரம்பரியம் ஆகாயத்தை தொடுவதற்கான தைரியத்தை வழங்குகிறது என திரவுபதி முர்மு கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory