» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து தீவிபத்து: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!

திங்கள் 3, அக்டோபர் 2022 11:52:45 AM (IST)

மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை சார்ஜ் போட்டபோது பேட்டரி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்தான்.

மும்பை புறநகர் பகுதியான பல்கார் மாவட்டம், ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் சர்பாஸ் அன்சாரி. இவரது மகன் சபீர் ஷாநவாஷ் அன்சாரி (7). சம்பவத்தன்று இரவு சபீர் அன்சாரி, பாட்டியுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தான். இந்தநிலையில் அதிகாலை 2.30 மணியளவில் சர்பாஸ் அன்சாரி அவரது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை எடுத்து சிறுவன் சபீர் அன்சாரி தூங்கிய அறையில் சார்ஜ் போட்டார்.

அதிகாலை 5.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறியது. பேட்டரி வெடித்ததில் சிறுவன் சபீர் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களும் உடைந்தன. சிறுவனுடன் தூங்கிக்கொண்டு இருந்த அவரது பாட்டி லேசான காயங்களுடன் தப்பினார். 80 சதவீத தீக்காயம் அடைந்த சிறுவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் சிறுவன் சபீர் அன்சாரி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தான். அதேநேரத்தில் ஸ்கூட்டர் பேட்டரி ஓவர்ஹீட் ஆகி வெடிக்கவில்லை, பேட்டரியை 3 முதல் 4 மணி நேரம் வரை சார்ஜ் போட வேண்டும் என விற்பனையாளர்கள் கூறியதாக சர்பாஸ் அன்சாரி தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "ஜெய்பூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் வெடித்த பேட்டரியை ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் இரவு தூங்கும் நேரத்தில் பேட்டரி மற்றும் செல்போன்களை சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும். இதேபோல எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகள் திறந்த பகுதியில், மனிதர்கள் கண்காணிப்பில் சார்ஜ் போடப்பட வேண்டும்" என கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory