» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயிலில் பயணிகள் சத்தமாக பேசக்கூடாது, பாட்டுக் கேட்க கூடாது : ரயில்வே நிா்வாகம் உத்தரவு

திங்கள் 24, ஜனவரி 2022 10:53:18 AM (IST)

ரயில் பயணத்தின்போது, சக பயணிக்கு இடையூறாக சத்தமாக பாட்டுக் கேட்க கூடாது, சத்தமாக பேசக்கூடாது என்று ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில்களில் பயணிகள் சிலருக்கு சத்தமாக பேசுவதும், சத்தமாக பாட்டு கேட்பதும் வழக்கமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சக பயணிகளால் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. இதையடுத்து ரயில் பயணத்தின் போது சத்தமாக பேசும், சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, ரயில் பயணத்தின்போது, பிறருக்கு தொந்தரவு தரும் விதமாக, சத்தமாக பாட்டு கேட்பது, சத்தமாக கைப்பேசியில் பேசுவதை தவிா்க்க வேண்டும். ரயிலில் ஒரு குழுவாக பயணிப்போா் நள்ளிரவு வரை பேச அனுமதிக்கப்பட மாட்டாா்கள். ரயில்களில் இரவு நேர விளக்குகளைத் தவிர, மற்ற மின் விளக்குகள் இரவு 10 மணிக்கு பிறகு, பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.இரவு 10 மணிக்குப் பிறகு, மெதுவாகப் பேசலாம். 

இது தொடா்பாக பயணிகளுக்கு அறிவுறுத்தி, தேவையான நடவடிக்கை எடுக்க ரயில்வே ஊழியா்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏதாவது வசதிக் குறைவு ஏற்பட்டால், அதற்கு ரயிலில் உள்ள ஊழியா்களே பொறுப்பேற்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், மாற்றுத்திறனாளி பயணிகள், தனியாகப் பயணிக்கும் பெண் பயணிகள் ஆகியோருக்கு தேவையான அவசர உதவியை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

adaminJan 25, 2022 - 04:23:51 PM | Posted IP 108.1*****

sema sema. night mobile la paatu podravanungala kollanum

ஒருவன்Jan 24, 2022 - 04:28:48 PM | Posted IP 108.1*****

அப்படியே வடை நாட்டு பீடாவாயனுங்களை துப்பாதீர் சொல்லவும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory