» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஞாயிறு 23, ஜனவரி 2022 7:26:04 PM (IST)

இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் ஜனவரி 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நேதாஜியின் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட உள்ளது அவரை கவுரவிக்கும் விதமாக, டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கிடையே, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். அப்போது உள்துறை மந்திரி அமித்ஷாவும் உடனிருந்தார்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory