» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரன் சமூக பரவலாகிவிட்டது: மத்திய சுகாதார அமைப்பு தகவல்!

ஞாயிறு 23, ஜனவரி 2022 7:09:13 PM (IST)

நாட்டில் ஒமைக்ரான் சமூக பரவல் ஆகி விட்டதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை  கரோனா உலக நாடுகளில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. ஒமைக்ரான் கரோனா வைரஸ் டெல்டா வகையை விட பாதிப்பு குறைவாகவே ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்பட்டாலும், இந்த  ஒமைக்ரான் பரவும் வேகம் உலக நாடுகளை கதி கலங்க வைத்தது. 

இந்தியாவிலும் டிசம்பர் முதல் வாரத்தில் பரவத்தொடங்கிய ஒமைக்ரன் சில வாரங்களிலேயே நாடு முழுவதும் பரவி விட்டது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கரோனா 3-வது அலை பரவல் உச்சம் பெற்றுள்ளது.  நாட்டில் தற்போது தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. தொற்று பரவல் அதிகரிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் சமூக பரவல் நிலையை எட்டி விட்டதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் INSACOG  என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்  கரோனா வைரசின் மாறுபாடு வகைகள் மற்றும் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதையும் இந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. 

பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும் கரோனாவாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒமைக்ரான் பாதிப்புகள் மிதமானது அல்லது  அறிகுறிகள் இல்லாததாகவே  இருந்தாலும்   மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் இந்த வைரசின் அச்சுறுத்தல் நிலை மாறாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory