» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை 20 மாடி கட்டட தீ விபத்தில் 7 பேர் பலி: பிரதமர் இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஞாயிறு 23, ஜனவரி 2022 10:57:30 AM (IST)



மும்பை டார்டியோ பகுதியிலுள்ள 20 மாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

மும்பை "காந்தி மருத்துவமனை எதிரே உள்ள 20 தளங்கள் கொண்ட கமலா கட்டடத்தில் நேற்று காலை 7 மணியளவில் பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து 18-ஆவது மாடியில் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதில் காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

நாயர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 7 பேரில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். பாட்டியா மருத்துவமனை மற்றும் கஸ்தூரிபா மருத்துவமனையில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.  இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அளித்துள்ளார்.

இதோபோன்று தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மகாராஷ்டிரம்  அரசு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் உறுதியளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory