» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் குத்திக் கொலை: ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு!

வெள்ளி 3, டிசம்பர் 2021 12:24:48 PM (IST)

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப் குமார் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவாளா பகுதியில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப் குமார் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கேரள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சந்தீப் குமாரை ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் கொலை செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக, "சந்தீப் குமார் கொலைக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை" என கேரள பாஜக விளக்கம் அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory